
The Planet Moon’s Effects in the Twelve Zodiac Signs (in Tamil)
The Planet Moon’s Effects in the 12 Zodiac Signs (in Tamil)–
12 ராசிகளில் சந்திரன் இருக்கும் போது உண்டாகும் பலன்கள்
மீனம்
|
மேஷம்
சூரியன் |
ரிஷபம் |
மிதுனம் |
கும்பம்
|
ராசி |
கடகம்
| |
மகரம்
|
சிம்மம் | ||
தனுசு
|
விருச்சிகம் |
துலாம் |
கன்னி |
1. ஒரு ஜாதகரின் மேஷ கட்டத்தில் சந்திரன் இருக்கும் போது அவரின் குணங்கள்
இந்நிலை, ஜாதகருக்கு சுதந்திர எண்ணம், வைராக்கியம், தைரியம், வீரம், போன்றவற்றைக்கொடுக்கும்.
மீனம்
|
மேஷம்
சந்திரன் |
ரிஷபம் |
மிதுனம் |
கும்பம்
|
ராசி |
கடகம்
| |
மகரம்
|
சிம்மம் | ||
தனுசு
|
விருச்சிகம் |
துலாம் |
கன்னி |
தான் நினைத்ததை சாதிக்கவேண்டும், தான் நினைக்கின்றபடி மற்றவர்கள் நடக்க வேண்டும் என்ற எண்ணம் ஜாதகருக்கு மேலோங்கும். பிறரையும், அவர்களின் எண்ணங்களையும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். மேலும், அவசரம், முன்கோபம், சலிப்பு போன்றவை இவர்களை ஆட்கொள்ளும்.
2. ரிஷபத்தில் (ரிஷப கட்டத்தில்) சந்திரன் இருக்கும் போது
ரிஷபத்தில் சந்திரன் இருக்கும் போது, ஜாதகரிடத்தில் இனிய சுபாவமும், அவர் பேச்சில் நளினமும் இருக்கும். இவர் தன் காரியத்தை பிறரைக் கொண்டு சாதித்துக்கொள்வார். நுட்பமாக பேசுவார். சில நப்பாசைகளுடன், சில காரியங்களில் இறங்கி, தனக்கு இடர் வரும் எனத் தெரிந்தவுடன் தான் தப்பித்துக்கொள்ளும் திறன் உள்ளவர். பயந்த சுபாவத்துடன் இருந்தாலும், தன் தந்திரத்தால் தன் பகையை முறிக்கும் திறமையும் உள்ளவர் இவர். பொருள் சேர்ப்பதையையே சிந்தனையாகக் கொண்டவர் இந்த ஜாதகர். மேலும், சுய பாதுகாப்பு, நிர்வாகம், பலம், சிக்கனம், அமைதி போன்றவை இவரிடத்தில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
3. மிதுனத்தில் (மிதுன கட்டத்தில்) சந்திரன் இருக்கும் போது
ஜாதகர் இரட்டை சிந்தனைகள் கொண்டவராக இருப்பார். தன் செயல்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள பல வகையான யோசனைகளையும், தந்திரங்களையும் கையாள்வதில் இவர் வல்லவராக இருப்பார். வார்த்தை ஜாலங்களால் தன் மதிப்பை பிறரிடத்தில் இவர் உயர்த்திக் கொள்வார். கள்ளத்தனமும், போலி ஆடம்பரமும் இன்றி நடந்து கொள்ளும் குணமுடையவர் இவராவார். உறுதியும், புத்திசாலித்தனமும், துணிவும், திறமையும் உள்ளவராக இருப்பார். இரக்க குணமும், பிறருடன் இணங்கிப் போகும் குணமுடையவராகவும் இவர் இருப்பார்.
4. கடகத்தில் (கடக கட்டத்தில்) சந்திரன் இருக்கும் போது
ஜாதகர் தனக்கென்று ஒரு கொள்கையும், பிடிவாத குணமும், சாமர்தியமும், தைரியமும் உடையவராக இருப்பார். யார் எதை சொன்னாலும் அதை ஆராய்ந்து, பலரிடத்தில் விவரம் கேட்டு தெரிந்து கொண்டாலும், தன் எண்ணப்படியே நடப்பார். எளிதில் எதையும் நம்பமாட்டார். பிறர் தன் ஆணைக்கு கட்டுப்படவேண்டும் என விரும்புவார். தன் காரியங்களை சாதித்துக்கொள்ளும் திறன் படைத்தவர். பிறரை எடை போட்டு ஆராய்ந்து, செல்வம் படைத்தவர்களுடன் இவர் பழகுவார். சிறந்த பொருட்கள் இருந்தாலும் அடைவிட உயர்ந்தவைகளை தேடுவார். இவர் ஆணவம், தன்னலம் கொண்டவராவர்.
5. சிம்மத்தில் (சிம்ம கட்டத்தில்) சந்திரன் இருக்கும் போது,
ஜாதகர் தனக்கென்று தனிப்பாதை அமைத்துக்கொள்வார். பிறர் தன்னை வணங்கவேண்டு என விரும்புவார். இவர், வீண் கர்வம், முரட்டு பிடிவாதம், வாக்கு சாதுர்யம், கடின உழைப்பு, மனோபலம் கொண்டவராவார்; அனைவராலும் விரும்பப்படக்கூடியவராவார். தன் எதிரியை தக்க தருணத்தில் வெற்றி கொள்வார். அனத்தும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளக்கூடிய, அதே சமயத்தில், அலட்சிய சுபாவம், வரட்டு பிடிவாதம் கொண்டவரும் இவரே. தன்னைப் பிறர் போற்ற வேண்டும் என நினைக்கக்கூடியவர். முகஸ்துதியில் பிறரிடம் எளிதில் ஏமாந்து விடக்கூடியவரும் இவரே. தன் அகம்பாவத்தால் நஷ்டமடைவார். இவர் ஆற்றல் உள்ளவராக இருந்தாலும், ஆத்திரத்தில்
நிதானம் இழப்பவராவார்.
6. கன்னியில் (கன்னி கட்டத்தில்) சந்திரன் இருக்கும் போது,
தோற்றத்தில் பொலிவும், சுபாவத்தில் கலகலப்பும், பெண்களின் சாயலும் ஜாதகரிடத்தில் தெரியும். சிக்கனம் என்ற பெயரில் அளவுக்கு மீறி செலவு செய்வார். தன் காரியத்தை நயந்து பேசி சாதித்துக் கொளவார். இவர், ஊக்கமும், உழைப்பும், சஞ்சல குணமும் கொண்டவராவார்; உயர்ந்த மனிதர்களுடன் நட்புக்கொள்ள விரும்புவார். நம்பிக்கை குறைந்து இருப்பதால், தான் செய்ய வேண்டிய காரியங்களை பிறரிடம் கொடுத்து செய்வார். இவர் சலன புத்தி, பேராசை கொண்டவராக இருப்பதால், சிலர் இவருக்கு ஆசை வார்த்தை காட்டி இவரிடமிருந்து செல்வத்தை பறிப்பார்கள். வஞ்சகர்களை, ஏமாற்றுக்காரர்களை நம்பும் இவர், நாணயமானவர்ளையும், தனக்கு உதவி புரியும் நண்பர்களையும், உறவினர்களயும் முதலில் நம்பாமல், பிறகு நம்புவார். இவர் பொருள் சேர்க்கும் ஆர்வம் உள்ளவராக இருப்பார்.
7. துலாமில் (துலாம் கட்டத்தில்) சந்திரன் இருக்கும் போது,
ஜாதகர் எதிலும் நியாயம், நேர்மை, வாக்கு தவறாமை, சீராக நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராவர். இவர் வாக்கு சாதுரியம் மிக்கவர். சில சமயங்களில், பிறர் கூறும் கருத்துக்களை எடுத்துக்கொள்ளாமல், அபசகுனமாக பேசிவிடுவார். இவர் செல்வம் உள்ளவர் பக்கம் சாய்வார்; சிலரை சீண்டி வேடிக்கை பார்பார். பிறரைப் போற்றி, தனது காரியத்தை சாதித்துக்கொள்ளும் திறமை இவரிடத்தில் இருக்கும். சுறுசுறுப்பும், தெளிவும் கொண்டவர்; ஆடம்பர வாழ்க்கையையும், கௌரவத்தையும் எதிர் பார்ப்பார். அவசர வார்த்தைகளால், நண்பர்கள் மூலம் கிடக்கும் உதவிகளையும், நன்மைகளையும் இவர் இழந்து விடுவார். பிறர் கூறும் கருத்துக்களை கேட்பது போல் இருந்து, தன் எண்ணப்படியே இவர் நடப்பார். இவர், கலைகளில் ஈடுபாடு கொண்டவராகவும், மனோபலம், உடல் பலம், அதிக ஆற்றல், துணிவு போன்றவற்றைக் கொண்டு செயல்படுபவராகவும் இருப்பார்.
8. விருச்சிகத்தில் (விருச்சிகம் கட்டத்தில்) சந்திரன் இருக்கும் போது,
ஜாதகர் சகல விஷயங்களிலும் ஆர்வம் காட்டி சிக்கனமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார். அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்வார். இவர் சாதனை படைக்கும் எண்ணம் கொண்டவராக இருப்பார். மேலும், பேச்சில் உட்பொருள் வைத்து பேசுபவராகவும், விளையாட்டாக பேசி மற்றவர்களின் குற்றம் குறைகளை எடுத்து கூறுபவராகவும் இவர் இருப்பார். தனது தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பவராகவும் இருப்பார். சங்கடங்கள் வரும் போது அவற்றிலிருந்து எப்படியாவது விலகிக்கொள்வார். அதீத கோபமும், துணிவும், தன்னம்பிக்கையும், சிறந்த கற்பனை குணத்துடனும் இவர் இருப்பார்; மற்றவருக்கு ஆலோசனை கூறுபவரராகவும் இருப்பார் என்பதில் ஐயமில்லை.
9. தனுசில் (தனுசு கட்டத்தில்) சந்திரன் இருக்கும் போது,
ஜாதகர் திட சிந்தனை, வைராக்கியம், பொன்மனம், நேர்மை, நல்லொழுக்கம், கொண்டிருப்பார். இருந்தாலும் தனது பேச்சால் பிரச்சினைகளை வரவழைத்துக்கொள்வார். விட்டுக்கொடுத்து வாழும் மனப்பான்மை, பிறருக்கு உதவும் குணம் கொண்டிருந்தாலும், இவர் தன் குடும்பத்திற்கு ஆகாதவராகவே இருப்பார். வாக்கு சாதுர்யம் உள்ள இவர், சில சமயம் பொய் பேசி தன் கௌரவத்தை கெடுத்துக் கொள்வார். ஆனால், ஏட்டுக் கல்வி, அனுபவ கல்வி, ஞானம், தெய்வீகத்தன்மை, தெய்வ அனுகிரகம் ஆகியவற்றை கொண்டவராக இவர் இருப்பார். இவர் மேலானவர்களின் நட்பு கொண்டிருப்பார் ஆனாலும் சிறிது பொறாமை குணத்துடன் இருப்பார் என்பது நியதி. தன் முன்னேற்றத்திற்காக எதையும் செய்வார். சஞ்சல மனம் மற்றும் வேகமான செயல்பாடு உள்ளவர் இவராவார்.
10. மகரத்தில் (மகரம் கட்டத்தில்) சந்திரன் இருக்கும் போது,
ஜாதகர் எதையும் யோசித்து செயல்படுவார். பல வழிகளில் சாமர்தியம் காட்டி தன்னிடம் எல்லாமே இருப்பது போல் காட்டிக்கொள்வார். இவர் பிறரின் அபிப்பிராயம் கேட்டாலும், தன் அபிப்பிராயத்தை சொல்ல மாட்டார். தன் எண்ணப்படியே செயல்படுவார். சில பிரச்சினைகளுக்கு தன் மனதுக்குள்ளேயே போராட்டம் நடத்தி தக்க வழி காண்பார். மற்றவர் குறித்து சரியாக மனதிற்குள்ளேயே எடை போடும் திறன் இவரிடத்தில் இருக்கும். தன் எண்ணம், செயல் போன்றவற்றை இவர் வெளிப்படுத்திக் கொள்ளமாட்டார். பிறரை அடிமைகளாக நடத்துபவராகவும் இருப்பார். செல்வம் அதிகமாக இருந்தால் யாரையும் மதிக்கமாட்டார். இவர் பகையை மனதில் வைத்து பகையை வெற்றி கொள்வார். தேவையானால் மட்டுமே மற்றவரிடத்தில் பழகுவார். இவரிடத்தில் பொருள் சேர்க்கும் எண்ணம் அதிகம் இருக்கும். தன் காரியத்தை சாதிக்க வல்லவராகவும் இருப்பார்.
11. கும்பத்தில் (கும்பம் கட்டத்தில்) சந்திரன் இருக்கும் போது,
ஜாதகர் தீர்க்கமான சிந்தனை, காரிய சாதனை, தர்ம சிந்தனை, சிரித்த முகம், குழந்தை உள்ளம் கொண்டவராக இருப்பார். நியாய தர்மங்களுக்கு மதிப்பளிப்பவர், பிறரின் அன்புக்கு கட்டுப்பட்டவர். ஆனால், அதிகாரத்திற்கு கட்டுப்படமாட்டார். மரியாதைகுரியவர்களைத் தவிர பிறருக்கு தலை வணங்க மாட்டார். மனைவி மேல் பாசம், அதிக கல்வி, அதிக அனுபவம் ஆகியவற்றை இவர் கொண்டிருப்பார். இவர் ஆடம்பரம், விளம்பரம் போன்றவற்றை விரும்பமாட்டார். சகல விஷயத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இவரிடத்தில் அதிகம் இருக்கும். இவர் பல கலைகளை கற்பார். தெய்வ அனுகிரகமும், இளகிய மனமும் கொண்டிருப்பார். துணிவும், ஆற்றலும், மனோபலமும், அனைத்து காரியங்களையும் திறம்பட செய்து முடிக்கும் திறனையும் கொண்டவராக இவர் இருப்பார். இருந்தாலும், கலகம் மூட்டும் குணமும் இவரிடத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது.
12. மீனத்தில் (மீனம் கட்டத்தில்) சந்திரன் இருக்கும் போது,
ஜாதகர் சில சமயம் சுறு சுறுப்பாகவும், சில சமயம் மந்தமாகவும் இருப்பார். ஆனால், அனைத்து காரியங்களையும் நேர்த்தியாக செய்வார். இவரிடத்தில் மனத்தெளிவும், வாக்கு சாதுர்யமும் இருக்கும். பிறரிடத்தில் நளினமாக பேசி தங்கள் காரியத்தை சாதிப்பார். பிறரின் விருப்பத்திற்கும், எண்ணத்திற்கும் தக்கவாறு பேசுவார். ஒரு இடத்தில் அதிக நேரம் இருக்க மாட்டார். வீண் பிடிவாதம், வரட்டு கௌரவம் போன்றவற்றைக் கொண்ட இவர் பிறருடன் நெருங்கி பழக மாட்டார். சிறிது பொறாமை குணமும், வசை பாடும் குணமும், ஓரளவு கல்வி அறிவுத்திறனும், அனுபவ திறனும் கொண்டவராக இவர் இருப்பார். இருந்தாலும், கூச்ச சுபாவம், கஞ்சத்தனம், மேதாவித்தனம் போன்றவைகளும் இவரிடத்தில் இருக்கும். அசட்டு தைரியம், பயந்த சுபாவம் உள்ள இவர், தன் காரியத்தில் கண்ணாக இருப்பார். மேலும், இவர், கௌரவம், தன்னடக்கம், கற்பனை வளம் கொண்டவராக இருப்பார்.