Today's Rasi Palan - 16-01-2025

பட்டியல்

விவரங்கள்

நாள்

வியாழக்கிழமை

திதி

திரிதியை

நட்சத்திரம்

ஆயில்யம் பகல் 12.54 வரை பிறகு மகம்

யோகம்

சித்தயோகம் பகல் 12.54 வரை பிறகு அமிர்தயோகம்

ராகுகாலம்

பகல் 1.30 முதல் 3 வரை

எமகண்டம்

காலை 6 முதல் 7.30 வரை

நல்லநேரம்

காலை 10.30 முதல் 11.30 வரை

சந்திராஷ்டமம்

பூராடம் பகல் 12.54 வரை பிறகு உத்திராடம்


மேஷம்:



இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கணவன் - மனைவிக்கிடையே சிறிய அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.


ரிஷபம்:



உற்சாகமான நாள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.


மிதுனம்:



இன்று தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வு உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.


கடகம்:



உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்குக் குடும் பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.


சிம்மம்:



உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கியமான விஷயம் தொடர்பாக வாழ்க்கைத்துணையிடம் ஆலோசனை கேட்பீர் கள். சிலருக்கு தாய்மாமன் வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணை யாக இருப்பார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்பட்டு விலகும்.


கன்னி:



காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க் கைக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை உங்கள் தேவையறிந்து பண உதவி செய்வார். சிலருக்கு உறவினர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.


துலாம்:



இன்று புதிய முயற்சியைத் தவிர்க்கவும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். கொடுத்த கடனில் ஒரு பகுதி திரும்பக் கிடைக்கும். தொலை தூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொந்தரவு ஏற்படக்கூடும்.


விருச்சிகம்:



தேவையான பணம் கையில் இருப்பதால், செலவுகளை சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சி களைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வீட்டில் தொலைந்த பொருள் திரும்பக்கிடைக்கும். அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.


தனுசு:



இன்று எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை விட்டுப்பிடித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவுகளால் சங்கடம் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிகளில் மிகுந்த எச்சரிக்கை தேவை. வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பக்குவமான அணுகுமுறை நல்லது.


மகரம்:



உற்சாகமான நாள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவ தால், உற்சாகமாகக் காணப்படுவீர்கள். நிர்வாகத்தினரிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.


கும்பம்:



எதிர்பாராத பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய டிசைனில் ஆடை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட மறைமுக இடையூறுகள் நீங்கி, நிம்மதி பிறக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.


மீனம்:



தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படக்கூடும். பயணத்தின்போது கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். மனதில் அவ்வப்போது தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

Related Today's Rasi Palan

Today's Rasi Palan - 16-01-2025

பட்டியல்விவரங்கள்நாள்வியாழக்கிழமைதிதிதிரிதியைநட்சத்திரம்ஆயில்யம் பகல் 12.54 வரை பிறகு மகம்யோகம்சித்தயோகம் பகல் 12.54 வரை பிறகு அமிர்தயோகம்ராகுகாலம்பகல் 1.30 முதல் 3 வரைஎமகண்டம்காலை 6 முதல் 7.30 வரைநல்லநேரம்காலை 10.30 முதல் 11.30 வரைசந்திராஷ்டமம்பூராடம் பகல் 12.54 வரை பிறகு உத்திராடம்மேஷம்:இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கணவன் - மனைவிக்கிடையே சிறிய அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.ரிஷபம்:உற்சாகமான நாள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.மிதுனம்:இன்று தொடங்கும் புதிய

Read More

Today's Rasi Palan - 15-01-2025

பட்டியல்விவரங்கள்நாள்புதன்கிழமைதிதிதுவிதியைநட்சத்திரம்பூசம் காலை 11.53 வரை பிறகு ஆயில்யம்யோகம்சித்தயோகம்ராகுகாலம்பகல் 12 முதல் 1.30 வரைஎமகண்டம்காலை 7.30 முதல் 9 வரைநல்லநேரம்காலை 10.30 முதல் 11.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரைசந்திராஷ்டமம்மூலம் காலை 11.53 வரை பிறகு பூராடம்மேஷம்:அனுகூலமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு தாயின் தேவைகளை நிறைவேற்றி, அவருடைய ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.ரிஷபம்:உற்சாகமான நாளாக அமையும். எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல்

Read More

Today's Rasi Palan - 14-01-2025

பட்டியல்விவரங்கள்நாள்செவ்வாய்க்கிழமைதிதிபிரதமைநட்சத்திரம்புனர்பூசம் காலை 11.24 வரை பிறகு பூசம்யோகம்சித்தயோகம்ராகுகாலம்பகல் 3 முதல் 4.30 வரைஎமகண்டம்காலை 9 முதல் 10.30 வரைநல்லநேரம்காலை 7.45 முதல் 8.45 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரைசந்திராஷ்டமம்கேட்டை காலை 11.24 வரை பிறகு மூலம்மேஷம்:மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும்.ரிஷபம்:இன்றைக்கு புதிய முயற்சி எதுவும் மேற்கொள்ளவேண்டாம். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற் படக்கூடும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சில ருக்கு பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. வியாபாரம் எதிர்பார்த்த படி இருக்காது. பணியாளர்களால் பிரச்னை

Read More