Today's Rasi Palan - 25-12-2024

பட்டியல்

விவரங்கள்

நாள்

புதன் கிலமை 

திதி

நவமி இரவு 8.54 வரை, பிறகு தசமி

நட்சத்திரம்

அஸ்தம் பகல் 1.49 வரை, பிறகு சித்திரை

யோகம்

சிசித்தயோகம்

ராகுகாலம்

பகல் 3 முதல் 4.30 வரை

எமகண்டம்

காலை 9 முதல் 10.30 வரை

நல்லநேரம்

காலை 7.45 முதல் 8.45 வரை, மாலை 4.45 முதல் 5.45 வரை

சந்திராஷ்டமம்

சதயம் பகல் 1.49 வரை, பிறகு பூரட்டாதி

சூலம்

வடக்கு

பரிகாரம்

பால்


மேஷம்:




மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தந்தைவழியில் சில செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த பணிநெருக்கடி சற்று குறையும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.





ரிஷபம்:



புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.  வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.



மிதுனம்:



உற்சாகமான நாளாக இருக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரிய வர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும்.


கடகம்:



மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்கள் வருகையால் சில பிரச்னைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள் வார்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.


சிம்மம்:



புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகள் உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும்.


கன்னி:



அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பது உற்சாகமும் மகிழ்ச்சியும் தரும். வியாபா ரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.


துலாம்:



எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். மகான்களை தரிசிக்கவும் அவர்களின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலட்டிக்கொள்ளாமல் செய்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.


விருச்சிகம்:



இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் ஏற்படும் சில பிரச்னைகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும்.


தனுசு:



மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடக்கும்.


மகரம்:



அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும், எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில்  இதுவரை எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். லாபமும் அதிகரிக்கும்.


கும்பம்:



தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். குடும்பப் பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.


மீனம்:



மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். சிலருக்கு  பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. தெய்வப் பிரார்த்த னைகளை இன்று நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.


Related Today's Rasi Palan

Today's Rasi Palan - 16-01-2025

பட்டியல்விவரங்கள்நாள்வியாழக்கிழமைதிதிதிரிதியைநட்சத்திரம்ஆயில்யம் பகல் 12.54 வரை பிறகு மகம்யோகம்சித்தயோகம் பகல் 12.54 வரை பிறகு அமிர்தயோகம்ராகுகாலம்பகல் 1.30 முதல் 3 வரைஎமகண்டம்காலை 6 முதல் 7.30 வரைநல்லநேரம்காலை 10.30 முதல் 11.30 வரைசந்திராஷ்டமம்பூராடம் பகல் 12.54 வரை பிறகு உத்திராடம்மேஷம்:இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கணவன் - மனைவிக்கிடையே சிறிய அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.ரிஷபம்:உற்சாகமான நாள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.மிதுனம்:இன்று தொடங்கும் புதிய

Read More

Today's Rasi Palan - 15-01-2025

பட்டியல்விவரங்கள்நாள்புதன்கிழமைதிதிதுவிதியைநட்சத்திரம்பூசம் காலை 11.53 வரை பிறகு ஆயில்யம்யோகம்சித்தயோகம்ராகுகாலம்பகல் 12 முதல் 1.30 வரைஎமகண்டம்காலை 7.30 முதல் 9 வரைநல்லநேரம்காலை 10.30 முதல் 11.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரைசந்திராஷ்டமம்மூலம் காலை 11.53 வரை பிறகு பூராடம்மேஷம்:அனுகூலமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு தாயின் தேவைகளை நிறைவேற்றி, அவருடைய ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.ரிஷபம்:உற்சாகமான நாளாக அமையும். எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல்

Read More

Today's Rasi Palan - 14-01-2025

பட்டியல்விவரங்கள்நாள்செவ்வாய்க்கிழமைதிதிபிரதமைநட்சத்திரம்புனர்பூசம் காலை 11.24 வரை பிறகு பூசம்யோகம்சித்தயோகம்ராகுகாலம்பகல் 3 முதல் 4.30 வரைஎமகண்டம்காலை 9 முதல் 10.30 வரைநல்லநேரம்காலை 7.45 முதல் 8.45 வரை / மாலை 4.45 முதல் 5.45 வரைசந்திராஷ்டமம்கேட்டை காலை 11.24 வரை பிறகு மூலம்மேஷம்:மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும்.ரிஷபம்:இன்றைக்கு புதிய முயற்சி எதுவும் மேற்கொள்ளவேண்டாம். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற் படக்கூடும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சில ருக்கு பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. வியாபாரம் எதிர்பார்த்த படி இருக்காது. பணியாளர்களால் பிரச்னை

Read More